எங்களின் நாடாளுமன்ற பலத்தை நாம் முழுமையாக இதுவரை காட்டவில்லை என சுற்றுலா பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாரம் கிடைக்கவில்லை
தொடர்ந்துரையாற்றிய அவர்,''உறுப்பினர்கள் 159 பேர் உள்ளனர். ஒன்றிணைந்த எதிக்கட்சி எமக்கு ஒரு பொருட்டல்ல. வரலாற்றில் எமது நாட்டில் யாருக்கும் இவ்வாறான அதிகாரம் கிடைக்கவில்லை.
சூழ்ச்சி மற்றும் டீல் மூலம் எமது அரசாங்கத்தை பின்வாங்க வைக்க முடியாது. அவ்வாறான அரசை மக்கள் அமைக்கவில்லை.
நாட்டில் அனைவருக்கு ஒரே நீதியே செயற்படுகிறது. நேற்று இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் இருவரும் சீன சுற்றுலா பயணிகள் பலரும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒன்று நாட்டில் இருந்தால் அதற்கேற்ப அனைவரும் செயற்பட வேண்டும்.ஒருவர் சட்டத்தை மீறினால் அதற்கான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும்.அதில் ஜனாதிபதியா பொது மக்களா என பார்க்க முடியாது.''என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment