
நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைக்கு ‘கெஹெல்பத்தர பத்மே’ என்று அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி, 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இந்த போதைப்பொருள் தொழிற்சாலை இயக்கப்பட்டதாகவும், இதற்காக 2,000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தற்போது நடைபெறும் விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக கடுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது, என்று அமைச்சர் விஜேபால கூறினார்.
மேலும், இந்த நபர்களுக்கு அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் மூலம் போலி கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்
September 03, 2025
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment