• Latest News

    January 08, 2026

    இடியுடன் கூடிய மழை! பலத்த காற்று வீசக்கூடும்

    இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது.

    இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை 05.30 மணி முதல் இரவு  11.30 மணி வரை இலங்கை கடற்கரையை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே கடக்கும் வாய்ப்பு அதிகம் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. 

    தற்போது  காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல்  3.5 மீட்டர் வரை எழும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

    மேலும்   இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தக் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் குறித்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இடியுடன் கூடிய மழை! பலத்த காற்று வீசக்கூடும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top