கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது சரியா பிழையா என்பதற்கு அப்பால், ஹக்கீமின் கொள்கைக்கு விழுந்த செம்மட்டியான அடி என்றே இதனைக் கூற வேண்டும். மு.காங்கிரஸ் என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது, யாருடைய அடிமையாகவும் இருக்காமல் சுயமாக சிந்தித்து செயல்பட்டு நாம் சார்ந்த சமூகத்துக்கு ஏதாவது நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் ஹக்கீமுடைய கொள்கை எவ்வாறு இருக்கின்றது என்றால் தான் விரும்புகின்ற சிங்கள அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்றவரை எதிர்க்கட்சி அரசியலையே செய்வேன் என்ற கொள்கையாகும்.
இந்த கொள்கை ஹக்கீமுக்கு வேண்டுமானால் நன்மையாக அமையலாம் ஆனால் சமூகத்துக்கு ஒரு மண்ணாங்கட்டி நன்மையும் பெற்றுத்தரபோவதில்லை என்பதே உண்மையாகும்.
அதனால்தான் அவருடைய கட்சியிலிருக்கும் எம்பி மாருக்கும், மாநகரசபை உறுப்பினர்களுக்கும் மனக்கசப்பு ஏற்படுவது மட்டுமல்ல, என்ன செய்வதென்ற தடுமாற்றமும் ஏற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.
அந்த தடுமாற்றத்தின் விளைவுகள்தான் கடந்த காலங்களில் ஹக்கீமுடைய கட்சியை சேர்ந்த எம்பிமார் ஹக்கீமுடைய கொள்கையை உதறித்தள்ளிவிட்டு ஆளும் அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்த விடயமாகும்.
அவர்களது முடிவு சரியானது என்றே கூற வேண்டும். அதற்கு காரணம் ஹக்கீம் விரும்புகின்ற ஆட்சி வரும்வரை நாம் காத்துக் கொண்டிருந்தால் நமக்கு வாக்களித்த மக்களுக்கு ஒரு சேவையையும் செய்யமுடியாத நிலைதான் தோன்றும். அதன் காரணமாக முஸ்லிம் பிரதேசங்கள் சகல விடயங்களிலும் பின்தள்ளப்படும் நிலைதான் தோன்றும்.
ஹக்கீமின் தவறான கொள்கைகளுக்காக நமது சமூகம் பாதிக்கப்படுவதை இறைவனும் கூட ஏற்றுக்கொள்ள மாட்டான். ஹக்கீமின் தவறான கொள்கையென்பது சமூகம் சார்ந்த கொள்கையல்ல மாறாக தனது சுயநலம் சார்ந்த கொள்கை என்பதே உண்மையென்பதை நன்றாகவே அறிந்துவைத்துள்ள அவரது கட்சி எம்பிமார் மனதுக்குள் ஹக்கிமை திட்டிதீர்த்துகொண்டு ஆளும் கட்சியிடம் மறைமுகமாக உதவிகேட்டு அலையும் நிலையையும் நாம் கண்ணூடாக கண்டு வருகின்றோம்.
ஹக்கீமுடைய கொள்கையென்பது, கண்டியில் தான் ஒரு தேசிய கட்சியில் தேர்தல் கேட்டால்தான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட முடியும். மு.காங்கிரசில் தேர்தல் கேட்டால் வெற்றியடைய முடியாது என்ற ஒரே காரணத்துக்காகவே அவருக்கு வசதியான தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்து, கொள்கையற்ற அரசியலை செய்துவருகின்றார்.
இது சமூகத்துக்கு எதிரான ஒரு செயல்பாடாகவே இருந்து வருகின்றது. இதனால்தான் அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஹக்கீமுடைய சுயநல போக்குக்கு எதிராக செயல்பட நினைக்கின்றார்கள். அதிலொரு வடிவமே கொழும்பு மாநகர சபை பஜட்டுக்கு ஆதரவாக சுஹாரா புஹாரி வாக்களித்த விடயமாகும்.
அவர் வாக்களித்தது சரியா பிழையா என்பதற்கு அப்பால், ஹக்கிமின் தவறான கொள்கைக்கு ஆப்பு வைத்த சிங்க பெண்மணி என்றுதான் அவரை கூறவேண்டும். ஆளும் அரசாங்கத்தை தொடர்ந்து எதிர்த்து வருவதனால் நஸ்டமடையபோவது ஹக்கிமல்ல மாறாக சமூகம் என்பதுதான் உண்மையாகும். முஸ்லிம் சமூகம் எந்த தேசிய கட்சிக்களுக்கும் ஈடுவைக்கப்பட்ட சமூகமல்ல. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இனங்கிய அரசியல் செய்து நமது சமூகத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே வந்த கட்சியாகும். இதனை தன்னுடைய சுயலாபத்துக்கு ஹக்கீம் பயன்படுத்துவதை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை புரிந்தால் சரிதான்?

0 comments:
Post a Comment