இராணுவ
சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திவரும் முர்ஷி
ஆதரவாளர்கள் இராணுவ அச்சுறுத்தல் மத்தியிலும் நாளை மற்றொரு பாரிய
ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு கட்டடங்களை நோக்கி மில்லியன்
மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற் அழைப்பு விடுத்துள்ளனர். இராணுவ
சதிப்புரட்சிக்கு எதிரான கூட்டணி விடுத்த அறிவிப்பில், வீதிகளுக்கும்
சதுக்கங்களுக்கும் சென்று கெளரவத்தையும் சுதந்திரத்தையும் பெற போராடுங்கள்”
என அந்த அழைப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை முர்ஷி
ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எகிப்து இராணுவ நிர்வாகம் இரண்டாவது
முறையாக நேற்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது இடைக்கால அரசு மற்றும்
இராணுவத்தை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் விடுத்த அறிவிப்பில்,
அமைதியான ஆர்ப்பாட்டங்களில் இருந்து மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக
கடுமையான மற்றும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு
கொள்கைகளுக்கான தலைவர் கதரிர் அஷ்டன் எகிப்து சென்றுள்ளார் .அவர்
இராணுவத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர், துணை
ஜனாதிபதி மொஹமட் அல்பரதி மற்றும் இஹ்வான் தரப்பு , இராணுவ சதிப்
புரட்சிக்கு ஆதரவு வழங்கிய டமரோட் குழு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த
திட்டமிட்டுள்ளார்.
இஹ்வான் அமைப்பையும் உள்ளடக்கிய முழுமையான
அதிகார மாற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்போவதாக அஷ்டன்
வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறியுள்ளார். “வன்முறையை முடிவுக்கு
கொண்டுவருமாறு நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். உயிர்கள் பலியாவது
வருந்தத்தக்கது” என்றும் அஷ்டனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட ரீதியான அங்கீகாரம்
மற்றும் இராணுவ சதிப் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அழுத்தம்
கொடுக்கும் அடிப்படையில் கதரின் அஷ்டனுடனான சந்திப்பில் பங்கேற்க போவதாக
இஹ்வான்கள் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment