• Latest News

    August 28, 2013

    அமைச்சர் ஹக்கீமும் ஊடக சுதந்திரத்தை அவமதித்தார்?

    நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பேச்சுவார்த்தை நடத்திய அறையில் மாத்திரமின்றி, அறைக்கு வெளியிலும் இருக்க வேண்டாம் என அமைச்சர் மற்றும் அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஊடகவியலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
    நீதியமைச்சின் அழைப்புக்கு அமைய இந்த நிகழ்வு குறித்து செய்திகளை சேரிக்க ஊடகவியலாளர்களும், படப்பிடிப்பாளர்களும் அமைச்சுக்கு சென்றிருந்தனர்.
    ஆணையாளருக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமாகிய போது, சந்திப்பு நடைபெற்ற அறையில் மாத்திரமின்றி வெளியிலும் இருப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதித்தனர்.
    ஊடகவியலாளர்களை ஒரு அறையில் வைத்து மூட பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சித்த போதிலும் ஊடகவியலாளர்கள் அதனை மறுத்தனர். பேச்சுவார்த்தை நடைபெற்ற அறைக்கு அனுமதிக்கப்படாமை குறித்து ஊடகவியலாளர்கள் எந்த அதிருப்தியையும் கொண்டிருக்கவில்லை என்றாலும் அறைக்கு வெளியில் இருக்க அனுமதிக்கப்பாடமையானது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் ஹக்கீமும் ஊடக சுதந்திரத்தை அவமதித்தார்? Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top