• Latest News

    August 04, 2013

    ஹக்கீமின் அமைச்சுப் பதவிக்கு ஆப்பு

    முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பதவி பறிபோகக் கூடுமென சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சிறுபான்மை கட்சித் தலைவர் ஒருவரின் அமைச்சுப் பதவி பறி போகலாம் என தெரிவித்துள்ளது.
    ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. இதேவேளை, மாகாணசபைத் தேர்தல்களின் நிறைவில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாகாணசைபைத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக கட்சியின் சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் இவர்களுக்கு அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹக்கீமின் அமைச்சுப் பதவிக்கு ஆப்பு Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top