• Latest News

    August 04, 2013

    இராணுவ டாங்கிகளுக்கு முன்னால் திரண்டுள்ள பலமில்லியன் போராளிகள்

    download (6)எகிப்த்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் பேரணியில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ளனர் கடந்த ஜூலை மாதம் கூட்டுச்சதி மூலம் இஸ்லாமிய அரசை இராணுவத்துடன் இணைந்து அமெரிக்காவின் ஆசீர் வாதத்துடன் இஸ்லாமிய கட்சியான அன்நூர் கட்சியும் அரபுத்தேசியவாத சலபி இஸ்லாமிய அறிஞ்சர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்ச்சியில் ஜனாதிபதி கலாநிதி முர்சி இராணுவத்தால் கடத்தப்பட்டு மறைமுக இராணுவத்தளங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.

     இஹ்வான்களை பிரதி நிதித்துவப்படுத்தும் சமாதானத்துக்கும்     
    நீதிக்குமான   கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களும் இராணுவத்தால் மறைமுகமான இடங்களில் மறைத்து வைக்காப்பட்டு சித்திரவதைக்களுக்கு உள்ளாக்கப்படிருப்பதாக தெரிவக்கப்படுகிறது.
    இஸ்லாமிய சிந்தனையாளர்களால் அங்கிகரிக்கப்பட்ட யாப்பையும் புதிய அரசாங்கம் நிராகரித்துள்ளது அத்துடன் மதசார்பற்ற அரசே எகிப்தின் இன்றைய தேவை என்றும் இடைக்கால அரசாங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் .
    இஸ்லாமிய சரியாவை நோக்கிய இஹ்வாங்களின் அரசியல் நடவடிக்கைகளை தடுப்பதற்கான முழுப்பொறுப்பையும் அந்நூர் கட்சியினர் மிககட்சிதமாக மேற்கொண்டு வந்தனர் அரபுலகின் நிதிப்பங்களிப்புடன் இயங்கிவரும் அந்நூர் கட்சியின் செயர்ப்பாட்டாளர்கள் பெரும்பாலானோர் அரபுத்தேசியவாத சிந்தனையால் கவரப்பட்டவர்கள் இவர்களின் பங்களிப்புடன் பெரும் தொகை நிதியினை இராணுவ ஆட்சியாளர்களுக்கு செலுத்தியே ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் .
    சதிவேலைகளில் ஈடுபட்ட அந்நூர் கட்சி இராணுவ ஆட்சியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் தற்போது முறித்துக்க்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
    மேலும் உலகில் பலம்பொருந்திய இஸ்லாமிய இயக்கமாக உள்ள அல் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஈமானிய பலமும் அவர்களை நிதானமாக அல்லாஹ்வின் சத்தியத்தை காப்பதற்கான போராட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
    அவர்கள் உலகில் பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்திய முன் அனுபவங்களை கொண்டுள்ள இவ்வியக்கம் அவர்களது வளர்ச்சியில் பல்வேறு சோதனைகளைசந்தித்துள்ளனர் இவ்வாறான பல்வேறு பிரவ்ன்களை கண்டு அஞ்சவில்லை அவர்கள் அல்லாஹ்வின் கூலிப்படையினர் அல்லாஹ்வின் திருப்பதி ஒன்ரே அவர்களுக்கான கூலியாகும் அதனால்தான் இன்று கெய்ரோவில் கொழுந்து விட்டெரியும் வெயிலில் பலமில்லியன் மக்கள் ஒன்று கூடி இரும்புத்திரை யிட்டு சதிகாரர்களின் உள்ளங்களை நடுங்கச் செய்திருக்கிறார்கள்
    சதிகாரர்களின்பின்னால் செயற்படும் அமெரிக்க யூத சக்திகளின் அபிலாசைகளை நிறை வேற்றுவதற்காக துடித்துக்கொண்டுடிருக்கும் இராணுவ ஆட்சியாளர்கள் முஸ்லிகளின் குருதிகளை தெருக்காளில் ஓட்டி வருகின்றனர் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் நெஞ்சில் துப்பாகிரவைகளை வாங்கிக்கொண்ட பின்னும்அல்லாஹ்வின் திருநாமத்தை கூறிக்கொண்டு சரிந்து விழும் சஹீதின் பட்டியலில் இணைந்து கொள்ள பலமில்லியன் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
    இராணுவமும் ஆட்சியாளர்களும் மாறி மாறி விடுக்கும் அச்சுறுத்தல்களையும் மீறி பலமில்லியம் மக்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர் அல் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மீண்டும் ஜனாதிபதி முர்சி ஆட்சிக்கு வரும்வரை தாம் ஓயிந்து விடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
    அரபுதேசத்தில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய அறிஞ்சர்கள் சவூதி அரேபியாவின் கூட்டுச் சதியை எதிர்கத்தொடங்கி உள்ளனர் நேற்றயதினம் இடம் பெற்ற பல்வேறு ஜூம்மா பிரசங்கத்தில் பகிரங்கமாக சவூதி அரசாங்கத்தை எதிர்த்துள்ளமை அரபு நாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பல் வேறு சர்வதேச நாடுகளின் உலகத்தலைவர்கள் ஜனாதி பதி முர்சியை சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
    மத்திய கிழக்கில் இடம்பெற்ற அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமான போராட்டத்தை ஆய்வு செய்த யூத ஆய்வாளர்கள் விடுத்த அறிக்கையில் இஹ்வான்கள் இஸ்ரேலுக்கெதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றதற்கான காரணம் அவர்கள் துப்பாக்கியின் துளைகளுக்கூடாக சுவர்கத்தை காண்கின்றார்கள் என தெரிவித்துள்ளனர்.
             
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இராணுவ டாங்கிகளுக்கு முன்னால் திரண்டுள்ள பலமில்லியன் போராளிகள் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top