முஸ்லிம் பெண் போன்று அபாயா நீகாப்
அணிந்து சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் தேசிய சேமிப்பு வங்கியில்
கொள்ளையிட முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் தற்போது இராணுவ நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான
ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ்
வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன்
முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும்
இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களை இராணுவ
நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் இராணுவத தளபதி தயா ரத்நாயக்க ,
இராணுவத்தின் சட்ட ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment