மாண்டியாவில் போட்டியிட்ட பிரபல நடிகை ரம்யா,
மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் புட்டராஜுவை விட 67 ஆயிரம் வாக்குகள்
கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத்
தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின்
மகனான, குமாரசாமி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்
போட்டியிட்டு வென்றார்.
அதையடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியை ராஜினாமா செய்தார். அதே போல மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த
செல்வராயன் சுவாமி, சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரும்
பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த இரு தொகுதிகளும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின்
கோட்டையாக கருதப்படுபவை. இந்த இருதொகுதிகளிலும் போட்டியிடாத பாரதிய ஜனதா
கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது.
0 comments:
Post a Comment