• Latest News

    August 30, 2013

    நவிபிள்ளை – ஜனாதிபதி சந்திப்பு? இன்று தெரியும்: அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

    mahinda-rajapaksha-navanithanஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை இன்று அறிந்துகொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளரும், ஊடாக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
    நேற்று வியாழக்கிழமை ஊடக அமைப்பு இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நவநீதம்பிள்ளையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும் அவர் பிள்ளையை நேரடியாக சந்திக்க மாட்டாரென்றும் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
    இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில்,
    நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் கருத்துப் பரிமாறல்கள் மட்டுமே இடம்பெறவுள்ளன. எப்படியிருப்பினும் அது எவ்வாறு அமையும் என்பது குறித்து நாளை (இன்று) தெரியவரும் எனக் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவிபிள்ளை – ஜனாதிபதி சந்திப்பு? இன்று தெரியும்: அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top