நாளை நடைபெவுள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 24 ஆவது பருவ கால கூட்டத்
தொடரில் இலங்கைக்கான உயர் மட்ட குழுவினர் பங்கேற்க போவதில்லையென இலங்கை அரசாங்கம்
அறிவித்துள்ளது.
குறித்த கூட்டத் தொடர் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத் தொடரில் உயர் மட்ட அமைச்சர்கள் குழு பங்கேற்காது எனவும்
ஜக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க
மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலரே பங்கேற்கவுள்ளதாகவும்
வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment