சஹாப்தீன் -
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்து கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு சம்பந்தமான சர்வதேச கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் இக்கருத்து முஸ்லிம்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இக்கருத்து தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பாதுகாப்புச் செயலாளரின் கருத்து பொறுப்பற்றது, என்றும் அவர் முஸ்லிம் பயங்கரவாதிகளை இனங்காட்ட வேண்டுமென்றும் அக்குறணை புளுகொஹதென்னயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கேட்டுள்ளார்.
இதே வேளை, முஸ்லிம்கள் தேயிலையில் கலப்படம் செய்து இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கச் செய்துள்ளதாக பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களை மையப்படுத்தி பௌத்த இனவாதப் போக்காளர்கள் பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்றும், வர்த்தகத்தில் கலப்படம் செய்கின்றவாகள் என்றும், மோசடிக்காரர்கள் என்றும் இவர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு செல்லுகின்றார்கள்.
முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இன்று மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல தடவைகள் இன்றைய அரசாங்கத்திற்கு முற்பட்ட காலங்களிலும் தெரிவிக்க்பட்டு வந்துள்ளன. அதே வேளை, பாதுகாப்பு தரப்பினர் இலங்கை முஸ்லிம்களிடையே பயங்கரவாதக் குழுக்களில்லை என்று அவ்வப்போது தெரிவித்துக் கொண்டும் வந்துள்ளனர். அண்மையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், இந்தியாவை தாக்குவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் கருத்துக்களை வெளியிட்டது. இதனை இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் நிராகரித்து இருந்தனர்.இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்து கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு சம்பந்தமான சர்வதேச கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் இக்கருத்து முஸ்லிம்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இக்கருத்து தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பாதுகாப்புச் செயலாளரின் கருத்து பொறுப்பற்றது, என்றும் அவர் முஸ்லிம் பயங்கரவாதிகளை இனங்காட்ட வேண்டுமென்றும் அக்குறணை புளுகொஹதென்னயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கேட்டுள்ளார்.
இதே வேளை, முஸ்லிம்கள் தேயிலையில் கலப்படம் செய்து இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கச் செய்துள்ளதாக பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களை மையப்படுத்தி பௌத்த இனவாதப் போக்காளர்கள் பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்றும், வர்த்தகத்தில் கலப்படம் செய்கின்றவாகள் என்றும், மோசடிக்காரர்கள் என்றும் இவர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு செல்லுகின்றார்கள்.
இலங்கையில் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் ஆகியவற்றில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடமபெற்று வருவதாக பொது பல சேனாவும் அண்மையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்களிடையே போதைப் பொருட்களை கடத்தல் போன்ற பாரிய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் இருக்கின்றார்கள். அதே போன்று ஏனைய இனங்களிலும் இத்தகைய குற்றவாளிகள் இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்களில் ஒரு சிலர் குற்றங்களைச் செய்யும் போது தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாகக் சித்தரிக்கப்படுகின்ற வகையில் அமைந்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
ஒரு நாட்டடில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றதென்றால், அங்கு சட்டத்தின் ஆட்சியில் குறைபாடு இருக்கின்றது என்றே கூறுதல் வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், எந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் அவருக்கான தண்டணைகள் நீதிமன்றத்தின் மூலமான வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புப் பிரிவினர் எடுத்தல் வேண்டும்.
இதனைவிடுத்து முஸ்லிம்களில் யாராவது ஒருவர் ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற போது, அவரை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டு வருவதனை அவதானிக்கின்ற போது முஸ்லிம்களை திட்டமிட்ட வகையில் நசுக்குவதற்கு காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாகவே தென்படுகின்றன.
இலங்கையில் மிகப் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் எல்லா இனங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை அத்தகைய குற்றவாளிகள் என்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல்களில் இருந்து கண்டு கொள்ள முடிகின்றது. மேலும், இக்குற்றவாளிகளுக்கு இடையே ஒரு வலை பின்னலும் காணப்படுகின்றன. அவர்கள் தங்களை ஒரு குழுவாக அல்லது ஒரு சமூகமாக கருதிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இனம், மதம், மொழி என்வற்றிலிருந்து விடுபட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை எந்தவொரு இனத்தினரினதும் உறுப்பினர்களாக கருதிக் கொள்ள முடியாது.
ஆனால், இன்றும் இத்தகைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. குற்றவாளிகளுக்கு அடைக்களம் வழங்குகின்றவர்களாக பெரும்பாலும் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றார்கள்.
அண்மையில் 250 கிலோ போதைப் பொருள் இலங்கைக்குள் கடத்தி வரப்பட்டுள்ளது. இதனை இலங்கை சுங்கப் பிரிவினர் பாகிஸ்தான் சுங்கப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் வாயிலாக கைப்பற்றியுள்ளனர். இக்கடத்திலில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரும் குற்றவாளிகளாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இக்குற்றத்தைச் செய்தவர்கள் இவர்கள்தான் என்று நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்குதல் வேண்டுமேயன்றி, இவர்களை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் எல்லோரும் இவ்வாறுதான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களை கூறுகின்ற போது, ஏனைய சமூகத்தில் உள்ள சாதாரண பிரஜைகள் முஸ்லிம்களை வேறுவிதமாகவே பார்க்க முற்படுவர். இதனால், இனங்களுக்கு இடையே கசப்புணர்வுகள் வளர்வதற்கு வழியேற்பட்டு விடும்.
ஒரு சில முஸ்லிம்களைப் போன்று ஏனைய இனங்களிலும் இவ்வாறு குற்றங்களைச் செய்கின்றவர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களை வைத்துக் கொண்டு அந்த இனத்தவர்கள் எல்லோரின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதில்லை. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களின் பெயர்கள் கூட ஊடகங்களில் பெரும்பாலும் வெளிவருதில்லை. ஆனால், முஸ்லிம் ஒருவர் அதனைச் செய்ம் போது அதற்கு பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆதலால், இது விடயத்தில் நடுநிலைப் போக்கை கடைப் பிடித்தல் வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
இதே வேளை. முஸ்லிம அரசியல் தலைமைகளும், ஏனைய தலைமைகளும் முஸ்லிம்களில் ஒரு சிலர் குற்றங்களை செய்யும் போது, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருப்பவர்களின் கருத்துக்களை வன்மையாக கண்டித்தல் வேண்டும். அவ்வாறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருப்பவர்களோடு கலந்துரையாடல்களைச் செய்து, அவர்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும்.
முஸ்லிம்களின் மேல் சுமர்த்தப்பட்டு வருகின்ற கருத்துக்களுக்கும், செயல்களுக்கும் எதிராக ஊடகங்களில் அறிக்கைகளையோ, ஆர்ப்பாட்டங்களையோ செய்தால் மட்டும் போதாது. ஊமையைப் போல் பேசாது இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருக்கவும் முடியாது. முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டுகின்றவர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.
மேலும், பாரிய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களை பாதுகாக்கின்றவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் பாரிய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு உதவுதல் வேண்டும். குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களை திருத்தும் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இதே வேளை, முஸ்லிம்களிடையே காணப்படுகின்ற மத அமைப்புக்களுக்கும், சமூக அமைப்புக்களுக்கும் இடையே போட்டித் தன்மைகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களிடையே காணப்படுகின்ற பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கு பதிலாக பொலிஸிற்கு சென்று, பின்னர் கோடு, கச்சேரி என்று அலைந்து கொண்டிருக்கின்ற உண்மையையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதனை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் தங்களது குற்றச்சாட்டுக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் தங்களுக்குள் சிறுசிறு பிரச்சினைகளுக்கு முரண்பட்டு மோதிக் கொள்வதனை தவிர்த்தல் வேண்டும்.
முஸ்லிம்களிடையே காணப்படுகின்ற அமைப்புக்களும், பள்ளிவாசல்களின் நிர்வாகங்களும் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக மாறி இருப்பதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். முஸ்லிம்களின் எழுச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்களையும், முஸ்லிம்களை பிரதேச ரீதியாக நெறிப்படுத்துவதில் முதன்மை பெற்ற இடத்தை ஒரு காலத்தில் பெற்றிருந்த பள்ளிவாசல்களின் நிர்வாகங்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு வருவதென்பது இரகசியமானதல்ல. ஆனால், இதனையிட்டு முஸ்லிம் தனிநபர்கள் எவரும் தட்டிக் கேட்பதில்லை.
முஸ்லிம் தனிநபர்கள் முஸ்லிம் அமைப்புக்களிலும், பள்ளிவாசல்களின் நிர்வாகங்களிலும் அரசியல் தலையீடுகளை தடுப்பதற்கு முன் வராது போனால், தனி நபர்களின் கழுத்துக்களுக்கு ஆபத்து வருவதனை தடுக்க முடியாது. ஒற்றுமைப்பட்ட சமூகத்தினால் மட்டும்தான் சவால்களை வெற்றி கொள்ள முடியும்.
இன்று முஸ்லிம்களின் ஒற்றுமை அரசியல்வாதிகளின் இலாபங்களுக்கு பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இதனை முன் நின்று செய்கின்றவர்கள் கொந்தராத்துக்களையும், பதவிகளையும் பெற்றுக் கொண்டு தங்களின் குடும்பங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மொத்தத்தில் ஒரு சிலரின் குடும்பங்கள் வாழ்வதற்கு முழு முஸ்லிம் சமூகமும் பலியாக முடியாது. கேள்விகளை கேட்காத சமூகம் வெற்றிகளை காணாது. இது உலக வரலாறு கற்பித்துக் கொண்டிருக்கும் பாடமாகும்.
முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேயும், அமைப்புக்களிடையேயும் காணப்படுகின்ற சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கைகளை எம்மைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டும் போது, அவர்களிடம் கேள்விகளை கேட்கும் போது, அரசியல்வாதிகளினால் நெருக்குதல்களை எதிர் கொள்வதனையும் கூறுதல் வேண்டும். நமது பணி கொந்தராத்துக்களை பெறுவதற்கோ அல்லது பதவிகளைப் பெறுதற்கோ அல்ல. இந்த நாடு முன்னேற வேண்டும். முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாட்டின் அபிவிருத்திற்கு நாட்டின் தலைமைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் தலைமை செயற்பட்டாலும் அதனை பக்குவமாக தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
தனிநபர்கள் தமது சமூகத்தைப் பற்றி சிந்திக்காத நிலையில் தூசு போன்ற தடைகளும், எதிர்ப்புக்களும் பெரும் மலையாகவே தெரியும். தனிநபர்கள் தமது சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் போது மலை போன்ற தடைகளும், எதிர்ப்புக்களும் வெறும் தூசாகவே தென்படும்.
0 comments:
Post a Comment