• Latest News

    September 19, 2013

    சும்மா படுத்து கிடப்பதற்கு மாதம் ரூ.3.15 லட்சம் சம்பளம்; நாசா தெரிவிப்பு

    உங்களால் தொடர்ந்து 70 நாட்கள் பெட்டில் படுத்து கிடக்க முடியுமா? சும்மா படுத்து கிடப்பதற்கு மாதம் ரூ.3.15 லட்சம் சம்பளம் தர காத்திருக்கிறார்கள். நீங்கள் தயார் என்றால், உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவை தொடர்பு கொள்ளலாம்.
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1UQGIQuD2pItd_ULed20SKdAEt8MQtZLP4t8Z6BGk1fjIEjIfzqNw5Cn9yBEFHKjhrq6hGeoKQwWcjgErV2C52pea8rQje79swDkidSwtw2RiDZNmELPoX_FTV4e8TsK4Fh0Clzm3TLkI/s1600/sssssssssssss.jpg

    அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள்  படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது. இதற்கு 5000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக இந்த தேடுதல் என்று நாசா தெரிவித்துள்ளது. ‘மைக்ரோ கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு குறித்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருந்தால் போதும் என்கிறது ஆய்வு குழு. ஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் உள்ள பிளைட் எனலாக் புராஜக்ட் குழு,
    விண்வெளி செல்லும் வீரர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வுக்கு ஒப்புக் கொள்பவர்கள், 70 நாட்கள், 24 மணி நேரமும் ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டுமன்றி மற்ற நேரங்களில் தொடர்ந்து ‘ஹெட் டவுன் பெட் ரெஸ்ட் பொசிஷனில் இருக்க வேண்டும்.
    விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் எடையில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, பெட்டில் படுத்திருப்பவர்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எலும்பு, தசை, இதயம், நரம்பு மண்டலம், சுழற்சி மண்டலங்கள் உணவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஆய்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சும்மா படுத்து கிடப்பதற்கு மாதம் ரூ.3.15 லட்சம் சம்பளம்; நாசா தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top