ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
கார்கில் போருக்குப்பின் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்த நிலையில்இ கடந்த 2003–ம் ஆண்டு நவம்பர் மாதம் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனால் எல்லையோர பகுதியில் அமைதி திரும்பியது.இந்த நிலையில் கடந்த மாதம் 6–ந்தேதி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா பதிலடி
இந்த தாக்குதல்களை நிறுத்தும்படி பாகிஸ்தானுக்குஇ இந்தியா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.எனினும் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதோடுஇ காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.
உயிர்ச்சேதம் இல்லை
இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் பகுதியில் அமைந்துள்ள 4 இந்திய முகாம்கள் மீது நேற்று அதிகாலை 6.25 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.உடனே இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சண்டை சுமார் 10 மணியளவில் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் கடந்த 11–ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment