• Latest News

    September 04, 2013

    ரூபா 500 மில்லியன் நஸ்டஈடு கோரி கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் வாரப் பத்திரிகை ஒன்றிக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

    கடந்த 15.05.2013 ஆந் திகதி வெளியான வாரப் பத்திரிகை ஒன்று தனது முதலாவது பிரசுரத்தில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, விளையாட்டு, கூட்டுறவு அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு எதிராக அவதூறான வகையில் செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து இன்று 03.09.2013 ஆந் திகதி அமைச்சரின் சட்டத்தரணி காலித் எம்.முகைதீன் என்பவரால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட பத்திரிகை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு எதிராக அவரின் அரசியல் இருப்பை இல்லாமல் செய்யும் நோக்கிலே உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டமையால், தனக்கு பாரிய அவமானமும், கௌரவத்திற்கு கேடும் ஏற்பட்டுள்ளது. ஆதலால், தனக்கு ரூபா 500 மில்லியன் நஸ்டஈடு வழங்க வேண்டுமென்றினை அமைச்சர் மன்சூர் தனது சட்டத்தரணி மூலமாக குறிப்பிட்ட வாரப் பத்திரிகைக்கு அனுப்பினார்.
    குறித்த காலப் பகுதிக்குள் தனக்கு குறிப்பிட்ட பத்தரிகை நஸ்டஈடு வழங்குவதற்கு தவறியமையாலேயே கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (03.09.2013) கிழக்கு மாகாண அமைச்சர் வழக்கு தாக்கல் செய்ததாக அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வழக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரூபா 500 மில்லியன் நஸ்டஈடு கோரி கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் வாரப் பத்திரிகை ஒன்றிக்கு எதிராக வழக்குத் தாக்கல்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top