• Latest News

    September 10, 2013

    பொலிஸார் முழங்காலிட்ட விவகாரம்: விசாரணைக்கு 6 பேர் கொண்ட குழு

    காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரை சிரேஷ்ட அதிகாரியொருவர் முழங்காலிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 6 உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றே இதற்கென அனுப்பப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எமக்கு  தெரிவித்தார்.

    பொலிஸ்மா அதிபர் இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் நிர்வாகதிற்கு பொறுப்பான  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிகின்றது.

    கிழக்கு மாகாணத்தின்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர 100 இற்கும் அதிகமான ஆண் மற்றும் பெண் பொலிசாரை முழங்காலிடச் செய்த சம்பவம் தொடர்பிலேயே தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    எனினும் இது தொடர்பில் பூஜித ஜயசுந்தர  மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொலிஸார் முழங்காலிட்ட விவகாரம்: விசாரணைக்கு 6 பேர் கொண்ட குழு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top