(அகமட் எஸ். முகைடீன்)
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடன் ஆசிய மன்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்திவரும் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்துடன் இணைந்ததாக கொய்கா நிதி உதவியுடன் அக்கரைப்பற்று மாநகர சபை பிரதேசத்தில் உடற் பயிற்சிசாலை (ஜிம்) நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர மேயர் சக்கி அதாவுல்லா தலைமையில் நேற்று (10.09.2013) மாநகரபை அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்வுடன்படிக்கையில் அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா கையொப்பமிட்டு ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்திடம் கையளிக்கப்பட்டது.
இச்செயற்திட்டத்திற்கென கொய்கா நிறுவனத்தின் மூலம் ரூபா 3.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது மாநகர சபைஇ தனியார் மற்றும் பொது மக்களின் பங்கு பற்றுதலுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் கடற்கரை பிரதேசத்தில் உள்ள சுனாமியினால் பாதிக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைவிடத்தில் செயற்படுத்தப்படவுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர பிரதேசத்தின் வீதிகளை பராமரித்தல் முறையினை நடைமுறைப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமும் இச்செயல்திட்டத்துடன் இணைந்ததாக காணப்படுகிறது.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எம்.அஸ்மி, மாநகர சபை உறுப்பினர்கள்இ அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment