• Latest News

    September 02, 2013

    நிந்தவூரில் இடம்பெற்ற உதைபந்து போட்டி சமநிலையில் முடிவடைந்தது...


    (சுலைமான் றாபி)
    நிந்தவூர் சோண்டேர்ஸ்  விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்த சிநேகபூர்வ  உதைபந்து போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (30.08.2013) இடம்பெற்றது.


    போட்டியின் முதலாவது பாதி நேர ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் சோண்டேர்ஸ்  அணியின் செல்ல மாக அழைக்கப்படும் 'மல்லி' என்ற வீரர் அபார கோள் ஒன்றினைப் பதிவு செய்தார். இதன் பிறகு இன்னும் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது.
     போட்டி முதலாவது  பாதி நேர ஆட்டத்திற்கு  இடைநிறுத்தப்பட்ட போது  சோண்டேர்ஸ்  அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.போட்டியில் இரண்டாவது பாதி ஆட்டம் நிறைவடைய ஓரிரு நிமிடங்கள் எஞ்சியிருந்த வேளையில் அக்கரைப்பற்று அல் குரைஸ் அணி சார்பாக அஸ்வர் எனும் வீரர் கோள் ஒன்றினைப்பதிவு செய்தார். இதனால் போட்டி விறுவிறுப்பாக அமைந்து இறுதியில் 1-1 என்ற அடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது
     இப்போட்டியை கண்டு இரசிக்க அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் குழுமியிருந்தனர். இரண்டு அணிக்கும் தங்கள் தங்கள் கழக ஆதரவாளர்கள் உற்சாக ஆதரவினை வழங்கினர்.சோண்டேர்ஸ்  அணிக்கே கூடுதல் வெற்றி வாய்ப்புக்கள் காணப்பட்டன.ஆயினும் நிந்தவூர் சோண்டேர்ஸ் அணியினரால் கோள்கள் போட முடியாமைப் போனமை சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.
    இதே வேளை, அக்கரைப்பற்று அல் குரைஸ் அணியினரும் கோல்களைப் பெற தவறியிருந்தனர்.  .  சோண்டேர்ஸ்  அணி வீரர் ஒருவருக்கு மஞ்சள் நிறை அட்டை காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    இப் போட்டியில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் M.A.M.தாஹிர், பிரதேச சபையின் எதிர்க் கட்சித்தலைவர்  Y.L. சுலைமா லெவ்வை, முன்னாள் உதைப்பந்தாட்ட சிரேஷ்ட வீரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் இடம்பெற்ற உதைபந்து போட்டி சமநிலையில் முடிவடைந்தது... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top