• Latest News

    September 19, 2013

    நாட்டை பிளவுபடுத்த கூட்டமைப்பு முயற்சிக்கின்றது; குமரன் பத்மநாதன் குற்றச்சாட்டு

    வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளதென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.

    கிளிநொச்சி திருவையாறு செஞ்சோலையில் நேற்று (18) ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்:
     
    வட மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றது. எனவே
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.
     
    நாடு கடந்த தமிழீழ இராச்சியம் தற்போது கொள்கை மாறிச் செயற்பட்டு வருகின்றது.
    உலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தேவையின்றி தலையீடு செய்யக் கூடாது

    வட்டுக் கோட்டை தீர்மானம்- ஒஸ்லோ உடன்படிக்கை ஆகியவற்றின் மறு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
     
    வடக்கின் இளைஞர்களை மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்துவதற்கான மறைமுகமான கோரிக்கையினையே விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார்.

    நாடு கடந்த தமிழ் ஐக்கியத்தை உருவாக்கியதே நான் தான். அதன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டை பிளவுபடுத்த கூட்டமைப்பு முயற்சிக்கின்றது; குமரன் பத்மநாதன் குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top