- நம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம் எனவே வடக்கு தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கும் என நம்புவோம் என இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என்.கோபலசுவாமி தெரிவித்தார். வடக்கு மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக யாழ். வந்துள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று மாலை யாழ். விடுதியொன்றில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
- அதன்போதே அக்குழுவுக்கு தலைமை தாங்கும் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என்.கோபாலசுவாமி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:
பிரச்சினை இல்லாத தேர்தல் என்பது எங்கும் நடந்ததில்லை இங்கும் அதேபோல தான் இருப்பினும் நமக்கு வழங்கப்பட்ட வரையறைக்குள் நாம் எமது பணியை சரியாக செய்வோம்
எமக்கு இங்கு இதுவரை நடந்த தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பான விசாரணைகளை நாம் தொடங்கியுள்ளோம்.
முன்னைய தேர்தல்கள் போல இதுவரை பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
இந்த தேர்தலில் முறை கேடுகள் நடைபெறலாம் என்று ஊகத்தின் அடிப்படையிலும் சந்தேகத்தின் அடிப்படையிலும் கூறப்படுகின்றது.
நம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம் எனவே இந்த தேர்தல் நீதியாக நடைபெறும் என நாம் நம்புவோம்.
நாம் இந்த தேர்தல் தொடர்பான அறிக்கையை தேர்தல் முடிவுற்ற பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் அந்த அறிக்கையை பகிரங்க படுத்துவோம்.
இலங்கைக்கு நாங்கள் 16 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளோம் அதில் 7 பேர் கொண்ட குழு வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளோம்.
19ம் திகதி சகல பிரதேசங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து நிலவரங்களை நேரில் அறியவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். (எம்.ரி.-977)
0 comments:
Post a Comment