பொலிஸார் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுகின்றார்களா அல்லது
அகற்றுகின்றார்களா என கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கேள்வி
எழுப்பியுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்ற நியமிக்கப்பட்ட பொலிஸார் விசித்திரமான முறையில் கடமையாற்றுகின்றனர்.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றிய சில
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆளும் கட்சியின் பிரபல வேட்பாளர் ஒருவரின்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்ததாகத் கபே குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment