அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தலைவர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக்கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக்கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கி யொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா?
தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் படிப்பது இங்கிலாந்தில் அல்லது கனடாவில், இந்தியாவில், பிரான்ஸில். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக்கடாக்களாக்கி அவர்களது பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கிறார்கள்.
இதனாலேயே இன்று எமது அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலியாக்க முயல்கிறார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பொறுப்பான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர்களான ரெஜினோல்ட் குரே, டியூ குணசேகர, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ்பாரூக், பிரபா கணேசன், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் லெப்டினன்ட் கேணலாகவிருந்த இளந்தென்றல் என அழைக்கப்பட்ட தெய்வேந்திரன் ரகுணந்தன் தலைமையிலான முன்னாள் புலி உறுப்பினர்கள் 7 பேர் ஜனாதிபதி அவர்களிடம் வெற்றிலையைக் கொடுத்து ஆளும் கட்சியில் இணைந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment