கண்டியை ஆட்சிசெய்த இறுதி சிங்கள மன்னனானஸ்ரீ
வீர பராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் புத்தளம் பெரிய
பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த எமது நாட்டின் தலைவராக ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச விளங்குகிறார். வடமேல் மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில்
கலந்துகொண்ட ஜனாதிபதி நேற்று (17) புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கும் விஜயம்
செய்தார்.
புத்தளம் பெரிய பள்ளிக்கு 1720 ஆம் ஆண்டு
ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் வருகை தந்து –
புத்தளம் மக்கள் செய்த சங்கைக்காக தனது உத்தியோக பூர்வக் கொடி- வெண்
சாமரைகள் இரண்டு- 18 வெள்ளிக் குஞ்சங்கள்- பாரிய ஊது குழல் ஒன்று-
ஆலவட்டங்கள்-கொடிகள்- காழா விளக்கு எனப்படும் பூமணி விளக்குகள் போன்றனவற்றை
பள்ளிக்கு அன்பளிப்பு செய்தார்.
எனினும் இன்று அவற்றுள் எஞ்சி இருப்பது
வெண் சாமரையும்- ஊது குழலின் ஒரு பகுதியும் மட்டுமே. ஜனாதிபதி இவற்றைப்
பார்வையிட்டதுடன் கட்டிடக் கலையம்சம் வாய்ந்த பள்ளிவாசலையும் சுற்றிப்
பார்வையிட்டார்.
0 comments:
Post a Comment