
உரிய வாக்காளர் அட்டை இன்றியும் வாக்காளர்கள் தமது வாக்கினை அளிக்க
முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு மத்திய நிலையத்திற்குச் சென்று தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால்
அலுவலகங்களில் சென்று அதுகுறித்து வினவி அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
எனவும் நாளை (20) வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட மாட்டாதெனவும் அவர்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment