• Latest News

    September 19, 2013

    அமெரிக்காவில் ஸ்பானிஷ் வம்சாவழியினர் மத்தியில் இஸ்லாத்தின் செல்வாக்கு அதிகரிப்பு!

    அமெரிக்காவில் ஸ்பானிஷ் வம்சாவழியினர் மத்தியில் இஸ்லாத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

    ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஹிஸ்பானிக்குகள் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரப்படி ஹிஸ்பானிக் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாகும்.

    ஆனால், ஃப்யூ ஃபாரம் ஆன் ரிலீஜியன் அண்ட் பப்ளிக் லைஃப் என்ற அமைப்பின் புள்ளிவிபரப்படி 2011-ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
    எளிமை, சமூக ஐக்கியம், உறுதியான குடும்ப உறவுகள், பரஸ்பர ஆதரவு, ஆன்மீக ஒழுக்க விழுமியங்கள், ஏழைகளுடனான அணுகுமுறை ஆகியவை ஸ்பானிஷ் வம்சாவழியினர் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வதற்கான காரணிகளாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    பால் சமத்துவம், பாதுகாப்பு, மனித நேயம் ஆகிய காரணங்களால் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர். லத்தீன் அமெரிக்க (தென் அமெரிக்க) நாடுகளில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் குடியேறிய ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்தாம் ஹிஸ்பானிக்குகள்.

    இவர்களில் 70 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால், கத்தோலிக்க கொள்கைகள், சடங்குகள், சர்ச்சின் நடவடிக்கைகள் ஆகியவற்றில் மனம் வெறுத்துப் போய் வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் தங்களது மதத்தில் இருந்து வெளியேறுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்காவில் ஸ்பானிஷ் வம்சாவழியினர் மத்தியில் இஸ்லாத்தின் செல்வாக்கு அதிகரிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top