• Latest News

    September 13, 2013

    ஞாணசார தேரரை ‘அமுடை’ (கச்சை) அணிவித்து விரட்ட வேண்டும் – புத்தளத்தில் விஜித்த தேரர் ஆக்ரோஷம்

    ஞாணசார தேரர் பொய்யைப் பரப்பி வருகின்றார். அவர் கூறுவது பௌத்த சமயத்தின் போதனைகள் அல்ல. அவரது பொய்களுக்கு எதிராக இந்த நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறும் பணியை ஆரம்பித்துள்ளேன்” எனக் கூறிய மகாவலி மகா விகாரையின் விகாராதிபதி, சங்க நாயக்கர் வடரெக விஜித்த தேரர், “தான் இதுவரை 40 தேரர்களின் அங்கியைக் கழற்றியிருப்பதாக ஞாணசார கூறுகின்றார். தேரர்களின் அங்கியைக் கழற்றுவதற்கு அவர் யார்? அவரைத்தான் அங்கியைக் கழற்றி அமுடை (கச்சை) அணிவித்து விரட்ட வேண்டும்” புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் இன்று (12-09-2013) பி.ப. 9:00 மணியளவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.
    இம் மக்கள் சந்திப்பில் புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், பெரியபள்ளி நிருவாகத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், மன்னார் கிளை செயலாளர் செய்னுலாப்தீன் எஸ். பரீட் உட்பட பொது மக்கள் கலந்துகொண்டனர். உரையின் இறுதியில் சபையோரின் சந்தேகங்களுக்கு விடையளித்து பேசிய வடரெக விஜித்த தேரர், இலங்கை முஸ்லிம்கள் இன்றுவரை காத்த பொறுமையினை நன்றியுடன் சிலாகித்தார்.
    மேலும், ஞாணசேர தேரர் நோர்வேயினதும் இஸ்ரவேலினதும் வாயாக மாறி இனவாதத்தைப் பரப்பி வருகின்றார் என்றும் கூறினார். நன்றியுரையை பெரியபள்ளி நிருவாக சபை செயலாளர் எம்.பி. நௌபல் தமிழிலும் சிங்களத்தில் ஹிஷாம் ஹுஸைனும் நிகழ்த்தினர்.- தகவல்: puttalamonline.com
    THE5 THE3 THE7 THE8 THE6 THE2
    About these ads
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஞாணசார தேரரை ‘அமுடை’ (கச்சை) அணிவித்து விரட்ட வேண்டும் – புத்தளத்தில் விஜித்த தேரர் ஆக்ரோஷம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top