• Latest News

    September 12, 2013

    சிரியா: இரு தரப்பினரும் போர்க் குற்றங்கள் செய்ததாக ஐ.நா. மனித உரிமைக் குழு!

    syrசிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும்இ மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

    அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப் பகுதியில்இ பெருமளவில் பொதுமக்களை கொலை செய்துஇ மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்திஇ கொத்தணிக் குண்டுகளையும் பயன்படுத்தியதாக ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது.
    பொதுமக்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் போராட்டக்காரர்கள் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்கான பொறுப்பு கூற நேரிடலாம் என்ற அச்சமின்றி இருப்பதாகவும்இ அவர்கள் நீதி முன்பாக நிறுத்தப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

    கடந்த மாதம் சிரியாவின் தலைநகர் டமஸாகசுக்கு வெளியே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோண் கெரி அவர்கள்இ ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவை ஜெனிவாவில் சந்திப்பதற்கு ஒரு தினம் முன்னதாக இந்த அறிக்கை வந்திருக்கிறது.

    நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை சிரியாவின் அரசாங்கம்தான் செய்திருக்க முடியும் என்று அமெரிக்காஇ பிரிட்டன்இ பிரான்ஸ் ஆகியன வலியுறுத்துகின்றன. ஆனால்இ இந்தக் குற்றச்சாட்டை சிரியா மறுத்திருக்கிறது.

    இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சிரியாவின் நெருக்கடியை கண்காணிக்க ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக் குழுஇ இந்த சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை 2011இல் உருவாக்கியது.

    சிரியாவுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விசாரணைக் குழு மே 15 முதல் ஜூலை 15 வரை 258 பேரிடம் பெற்ற சாட்சியங்கள்இ வீடியோ பதிவுகள் மற்றும் செய்மதிப் படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.

    பல மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தஇ கடுமையான ஷெல் தாக்குதலாலும்இ முற்றுகைகளாலும் நகரங்களும் கிராமங்களும் பாதிக்கப்பட்டஇ தண்டனை குறித்த அச்சமற்ற நிலையில் ஒட்டுமொத்த படுகொலைகள் நடந்த 'ஒரு போர்க் களமே சிரியா' என்று அந்த அறிக்கை கண்டுபிடித்துள்ளது.

    அரசாங்கப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என்றும்இ சித்ரவதைகள்இ ஆட்களை பணயம் வைத்தல்இ கொலை செய்தல்இ விசாரணையற்ற மரண தண்டனை நிறைவேற்றல்இ பாலியல் வல்லுறவுஇ பாதுகாக்கப்பட்ட பொருட்களை தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    மருத்துவமனைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன்இ பயிர்கள் எரிக்கப்பட்டுஇ பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீரும் மறுக்கப்பட்டது. கொலைகள்இ உரிய முறையற்ற மரண தண்டனைகள்இ சித்ரவதைஇ பணயம் வைத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பொருட்களை தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதக் குழுக்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டன.

    பொதுமக்கள் வாழும் இடங்களில் அவை வகைதொகையற்ற வகையில் ஷெல் தாக்குதலும் நடத்தியுள்ளன. ஒரு சம்பவத்தில்இ வடக்கு நகரான அலப்போவில் மத நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டிஇ போராட்டக்காரர்கள் ஒரு சிறுவனை தூக்கிலிட்டுள்ளனர்.

    போராட்டக்காரர்களும்இ குர்து போராளிகளும் சிறுவர்களை மனித கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். 2011 மார்ச் மாதத்தில் அதிபர் பஸார் அல் அஸதுக்கு  எதிரான போராட்டம்  ஆரம்பித்தது முதல்இ குறைந்தபட்சம் அரசாங்கப் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் 8 ஒட்டுமொத்த மனிதப் படுகொலைகளும்இ போராட்டக்காரர்களால்  ஒரு மனிதப் படுகொலையும் செய்யப்பட்டதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

    மேலும் 9 மனிதப் படுகொலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. இரசாயன தாக்குதல் குறித்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும்இ இதுவரை எப்படியான இரசாயனம் அதில் பயன்படுத்தப்பட்டது என்றோ அல்லது அதனை யார் செய்தார்கள் என்றோ தற்போதுள்ள ஆதரங்களை வைத்து அடையாளம் காண முடியவில்லை என்றும் அது கூறுகிறது.

    இரு தரப்பிலும் உள்ள இப்படியான போர்க்குற்றங்களைச் செய்தவர்கள் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் சந்திக்கவிருக்கும் அமெரிக்க – ரஷ்ய இராஜதந்திரிகளுக்கான தமது செய்தியாக இதனை வைக்கிறோம்.

    இந்த மோதலுக்கு இராணுவத் தீர்வு கிடையாது என்றும் ஆயுத உதவிகள் செய்பவர்கள்இ வெற்றி என்கிற மாயையைத்தான் தோற்றிவிக்க முடியும் என்றும் அது கூறியுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிரியா: இரு தரப்பினரும் போர்க் குற்றங்கள் செய்ததாக ஐ.நா. மனித உரிமைக் குழு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top