பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் அதிகரித்து வரும் வேளையில் பாலியல் பலாத்காரம் செய்வதில் ஆண்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
ஆசியா பசிஃபிக் பகுதியில் பத்தில் ஒரு ஆண் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது லண்டனில் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
இதில் பத்தில் ஒரு ஆண் மனைவி இருந்த பிறகும் அன்னியப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.ஆசியா பசிஃபிக் பகுதியில் பத்தில் ஒரு ஆண் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது லண்டனில் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
பாலியல் பலாத்காரம் செய்தததை ஒப்புக்கொண்ட பாதி பேரும் பொழுதுபோக்கிற்காக அன்னியப் பெண்ணைத் தொந்தரவு செய்ததாக கூறுகின்றனர். சொந்த மனைவிகளின் விருப்பமின்றி அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை ஆய்வில் கலந்து கொண்ட பாதி பேரும் ஒப்புக்கொண்டனர்.
மனைவி, காதலி, நண்பி இவர்களைத் தவிர வேறு பெண்களை நீங்கள் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளீர்களா என்ற கேள்விக்கு 11 சதவீதம் பேரும் 'ஆம்' என்று பதில் அளித்துள்ளனர்.
சர்வேயில் பங்கேற்ற பலரும் பெண்கள் மீது பாலியல் ஆதிக்கம் செலுத்தவே பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறுகின்றனர். மனைவி அல்லாத பெண்களை ஆசை வார்த்தை காட்டி பாலியல் உறவில் ஈடுபட்டதை பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தியதே இந்த எண்ணிக்கை இவ்வளவு உயரக் காரணம் என்றும்இ தற்போது ஆசியா பசிஃபிக் நாடுகளில் பதிவு செய்துள்ள பாலியல் பலாத்கார வழக்குகளை விட இது பல மடங்கு அதிகமாகும் என்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
வங்காள தேசம், இந்தியா, சீனா, கம்போடியா, பப்புவா நியூ கினியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஆண்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
பப்புவா கினியாவில் 62 சதவீதம் ஆண்களும், இந்தோனேஷியா நகரங்களில் 26 சதவீத ஆண்களும், கிராமங்களில் 19 சதவீத ஆண்களும், சீனாவில் 22 சதவீத ஆண்களும், கம்போடியாவில் 20 சதவீத ஆண்களும்இ இலங்கையில் 14 சதவீத ஆண்களும், வங்காள தேசத்தின் நகரங்களில் 14 சதவீத ஆண்களும், கிராமங்களில் 9 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை-அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுவதாக ஆய்விற்கு தலைமை தாங்கிய ரேச்சல் ஜேக்ஸ் கூறியுள்ளார். முன்னர் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் உலகில் மூன்றில் ஒரு பெண் சொந்த வீடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாவதாக கண்டறியப்பட்டது.

0 comments:
Post a Comment