அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது வழங்கும் வைபவம் நேற்றுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மகா சங்கத்தினர்-- அமைச்சர்கள்- கலைஞர்கள் உட்பட உள்நாட்டு - வெளிநாட்டு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2013ற்கான சர்வதேச சிறப்பு விருதை அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையளித்தார்.
புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காக நாடொன்று முன்னெடுக்கூடிய சவால்மிக்க செயற்பாடுகளை ஊக்குவித்தமைக்காக சர்வதேச ரீதியாக பாராட்டும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனம் அமைச்சருக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.
இது தவிர அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட வருடத்தின் சிறந்த சுகாதாரத் தலைமைத்துவ பாராட்டு விருதும் கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி டபிள்யூ. குமார ஹிரிம்புரேகமவினால் அமைச்சருக்கு வழங்கப்பட்டது
0 comments:
Post a Comment