கும்பல் கற்பழிப்பு
மும்பையில் 23 வயது பத்திரிகை பெண் புகைப்பட நிபுணரை 5 பேர் கும்பல்
கற்பழித்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த
சம்பவம் மகாலட்சுமி ரெயில் நிலையம் அருகே உள்ள பாழடைந்து கிடக்கும் சக்தி
மில் வளாகத்தில் கடந்த மாதம் 22–ந் தேதி நடந்தது. பெண் புகைப்பட நிபுணரை
கற்பழித்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவன் இளம் குற்றவாளி
என்பதால், அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளான்.
மற்ற 4 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் தங்களது காவலில் வைத்து தீவிர
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக சக்தி மில் வளாகத்தில் மற்றொரு 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. ஜூலை 31–ந் தேதி ஆண் நண்பருடன் அங்கு சென்ற தன்னை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழித்து விட்டதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த பெண் தைரியத்தை வரவழைத்து கொண்டு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த
சம்பவத்தில் ஒருவனை கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த பெண்ணை கற்பழித்த கும்பலில் 3 பேர், புகைப்பட நிபுணரை
கற்பழித்த கும்பலில் இடம் பெற்றவர்கள் என்றும் தெரியவந்தது.
இதுவரை கைதான 6 பேரிடம் நடத்திய விசாரணையில், தோண்ட தோண்ட பூதம்
கிளம்புவதை போல பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. புகைப்பட
நிபுணர் மற்றும் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட மில் வளாகத்தில் கடந்த 6
மாதத்தில் மட்டும் குறைந்தபட்சம் 10 பெண்கள் கோரமாக கற்பழிக்கப்பட்டு
உள்ளனர். இதை கைதான காமுகர்கள் போலீசில் ஒப்பு கொண்டு உள்ளனர்.
8 பேர் கும்பல்
இந்த காமகளியாட்ட கும்பலில் மொத்தம் 8 பேர் இருப்பதாக கைதான 6–வது
குற்றவாளி போலீசில் தெரிவித்து உள்ளான். இதனால் இன்னும் 2 பேருக்கு
போலீசார் வலைவிரித்து உள்ளனர்.
பொதுமக்கள் நெருங்க முடியாத அளவுக்கு மில் வளாகம் பாழடைந்து கிடப்பது
இந்த கும்பலுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இவர்கள் இதே வேலையாக செயல்பட்டு
உள்ளனர். தப்பி தவறி அங்கு செல்லும் பெண்களை தூக்கி சென்று கும்பலாக
சேர்ந்து கற்பழிப்பது இவர்களது வாடிக்கையாகி விட்டது. ஆனால் அந்த கும்பலின்
மிரட்டலுக்கு பயந்து போய் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலைய
படியேறவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார்
தெரிவிக்கும்படி நேற்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
0 comments:
Post a Comment