அவரை கொழும்புக்கு அழைக்கபபட்ட போதிலும், விசாரிப்பதற்கான காரணம் அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்பதுடன் அவரை விசாரிக்கும்போது சட்டத்தரணியொருவரை அழைத்துச் செல்வதற்கான அனுமதியையும் மறுத்துள்ளனர்.
மெகஸின் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அவருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதும் கைதிகளின் தொலைபேசி இலக்கத்திற்கு அவர் மேற்கொண்ட அழைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் மாணிக்கவாசகத்திடம் விசாரணை செய்துள்ளனர்.
தாம் ஒரு ஊடகவியலாளர் எனவும் இதுபோன்ற தொலைபேசிகள் பல தனக்கு அடிக்கடி வருவதாகவும், கைதிகள் மட்டுமன்றி கைதிகளின் உறவினர்களும் என்னுடன் வாதாடும் விதமாக தன்னைத் தொடர்பு கொள்வதாகவும் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் அசௌகரியங்கள் மற்றும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கதைப்பதற்கே தொலைபேசியில் அழைத்ததாக அவர் கூறியுள்ளார்.
அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துன்டிக்கப்பட்டதன் பின்னர் தாம் மீண்டும் அவர்களது இலக்கத்துடன் தொடர்பு கொண்டதாகவும் அது என்னுடைய தொழில் நடவடிக்கைகளுக்காகவே கதைத்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையில் வடக்கு பிரதேசத்தில் பி.பி.ஸி. செய்தியாளராக கடமையாற்றும் தன்னுடைய தொலைபேசி இலக்கம் அநேகருக்குத் தெரியும் எனவும் தன்னை நீண்ட நேரமாக விசாரணை செய்த பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மாணிக்கவாகம்முக்கு எதிராக முறைப்பாடு செய்வதா அல்லது அவரை மீண்டும் விசாரணைக்காக அழைக்க எதிர்பார்த்துள்ளார்களா என்பது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு எவ்வித தெளிவுபடுத்துதலும் செய்யவில்லை.
வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்ட மாணிக்கவாசகம் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு அதிகமான காலப்பகுதியாக வடக்கிலிருந்து பி.பி.ஸி தமிழ் ஓசையில் கடமையாற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.
பி.பி.ஸி.
0 comments:
Post a Comment