புகலிடக்
கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் நடவடிக்கை
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுவிஸ்லாந்து சமஷ்டி குடியேற்ற
பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் புகலிடக் கோரிக்கை
நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை சுவிஸ்லாந்து அரசாங்கம் நாடு கடத்தி வந்தமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்தே நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து
கொள்ளும் நடவடிக்கையினை கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகம் மேற்கொண்டு
வருவதாக அந்நாட்டு சமஷ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment