இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டை புறக்கணிக்குமாறு அங்கத்துவ நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (13.09.2013) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய மாநாட்டை அங்கத்துவ நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் பொது நலவாய மாநாட்டில் பங்குபற்ற தீர்மானித்துள்ள நாடுகளின் தலைவர்கள் தங்கள் சார்பில் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் குறித்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பட்சத்தில் அங்கு இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு ஆதரவு வழங்கியமைக்கு சமனாகும்.
இதனால் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை அங்கத்துவ நாடுகள் புறக்கணித்து.
தமது பொறுப்புக் கூறலை வெளிப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:
Post a Comment