• Latest News

    September 08, 2013

    நவனீதன்பிள்ளை மலர் வலையம் வைத்திருந்தால் இராணுவ வீரர்கள் காலால் உதைத்து கடலில் தள்ளுவார்கள்; கோட்டாபய

    இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நவனீதன்பிள்ளையினால்  இறுதிப் போர் இடம்பெற்ற வெல்லமுள்ளிவாய்க்கால; பகுதியில் தனது அனுதாபத்தைத் தெரிவிக்கும் முகமாக மலர் வலயம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தால் அந்த மலர் வலயத்தை இராணுவ வீரர்கள் காலால் உதைத்து கடலில; தள்ளுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
    ஆங்கில வார வெளியீடு ஒன்றுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    'நவீதன் பிள்ளை அம்மையார் வெல்லமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மலர் வலயம் ஒன்றை வைக்க எடுத்த முயற்சி குறித்து தெரியவந்தவுடன் அதற்கு நாம் மிகுந்த கண்டனத்தை தெரிவித்தோம்.
    தீவிரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த மலர்வலயம் வைத்தால் அதனை இராணுவ வீரர்கள் காலால் உதைத்து கடலுக்கு தள்ளி விடுவார்கள் என்றே நான் கூறினேன். அவர் செய்யும் பொறுப்பற்ற விடயங்களுக்கு நாம் பொறுப்பு கூறவேண்டியதில்லை என நான் தெளிவுபடுத்தினேன்.
    அதுமட்டுமன்றி அவர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்திலுள்ள டீ.எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு பௌத்த கொடியை வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தார்.
    அரசியல் பேதம் எதுவாக இருந்தாலும் இந்த நாட்டின் முதலாவது பிரதம ஒருவர் குறித்து அவ்வாறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு இருக்கும் அதிகாரம் என்ன? பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசியலமைப்பில் பொருத்தனை செய்யப்பட்டுள்ளது.
    அவருக்கு அவ்வாறான விடயங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய தேவையில்லை. அவர் அந்த மாதிரியான விடயங்களில் எல்லையை மீறிச் செயற்பட்டுள்ளார்."
    என்றபோதிலும், இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உயிரிழந்த எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு, மனித உரிமை பேரவையின் செயலாளர் நவனீதன் பிள்ளை மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்த எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள கருத்தை முற்றாக நிராகரிப்பதாக செயலாளர் நவீ பிள்ளையின் பேச்சாளர் முற்றாக மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
    செயலாளர் அம்மையார் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் கூறிய அவர், இலங்கை மட்டுமன்றி யுத்தம் இடம்பெற்ற நாடுகளுக்கு அவர் விஜயம் செய்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த நாடுகளில் அவர் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்துவது வழமை எனவும் அந்த பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவனீதன்பிள்ளை மலர் வலையம் வைத்திருந்தால் இராணுவ வீரர்கள் காலால் உதைத்து கடலில் தள்ளுவார்கள்; கோட்டாபய Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top