இவ்வாறு நேற்று (05.09.2013) நடைபெற்ற சர்வதேச பாதுகாப்புச் செயலமர்வின் இறுதி நாள் வைபவத்தில் தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஆலோசகர் கலாநிதி ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது போலியான பிரசாரமாகும். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடிவடையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பதே உண்மை.
புலம்பெயர்ந்து வாழும் புலிகள் இலங்கைக்குள் மீண்டும் செயற்பட சந்தர்ப்பம் தேடுகின்றனர். 10 வீதமான தமிழர்கள் சர்வதேசத்தில் வாழும் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆகவே இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக கூற முடியாது.
0 comments:
Post a Comment