• Latest News

    September 06, 2013

    பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் கைது!

    பிள்ளையை பாடசாலையில் சேர்க்க வேண்டுமாக இருந்தால் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்ட அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, குற்ற ஊழல் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, அவ் ஆணைக்குழுவின் அதிகாரிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கொட்டாவ ஆனந்த வித்தியாலய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிள்ளையை முதலாம் தரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிபர் குறித்த தாயிடம் கேட்டுள்ளார்.

    பிள்ளையைச் சேர்ப்பதாயின் அதற்கு உடன்படுவதாக தாயும் உடன்பட்டு, வேரஹேர பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்குள் நுழையும் வேளை குறித்த அதிபர் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் கைது! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top