லிபரல் தேசியக் கூட்டணி கட்சியானது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து டோனி அபாட் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தத் தேர்தலில் பொருளாதாரம், படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்படும் சுற்றுச்சூழல் வரியை குறைப்பது ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டன.
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டோனி அப்பாட்டுக்கு ரூபர்ட் முர்டோக்கின் ஊடக நிறுவனம் முற்றாக ஆதரவைத் தெரிவித்தது.
இன்று முதல் ஆஸ்திரேலிய அரசு புதிய நிர்வாகத்தின் கீழ் வியாபாரத்தை தொடங்கியுள்ளது என்றும்இ தங்களுடன் வர்த்தகம் செய்ய வருபவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் டோனி அபாட் அறிவித்துள்ளார்.
கெவின் ரட்டின் தொழிற்கட்சியின் ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காணவில்லை என்பதும்இ உட்கட்சி பூசலுமே அதன் தோல்விக்கான முக்கிய காரணம் என்று சிட்னியிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஜான் டேனிசன் கூறுகிறார்.
0 comments:
Post a Comment