• Latest News

    September 07, 2013

    சம்மாந்துறையில் காட்டு யானைகள் அட்டகாசம்!

    அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று (07.09.2013) அதிகாலை 04.00 மணியளவில் காட்டு யானைகள் மேற்கொண்ட அட்டகாசத்தினால் வீடொன்று உட்பட மதில் சுவர்களும் உடைந்துள்ளன.
    இன்று அதிகாலை சம்மாந்துறைப் பிரதேசத்தின் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதேசத்திற்குள் வந்த காட்டு யானைகள் அங்குள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரின் வீட்டை சேதப் படுத்தியுள்ளதுடன், அவ்வீட்டில் இருந்த நெல் மூடை ஒன்றினையும் வெளியில் இழுத்து சேதப்படுத்தியுள்ளது
    மேலும், இப்பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களில் உள்ள மதில் சுவர்களையும் சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு, பயிர்களையும் காட்டு
    யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
    அண்மைக் காலமாக அம்பாரை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கு வனபரிபாலனத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.



    .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறையில் காட்டு யானைகள் அட்டகாசம்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top