இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை
கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த
அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார்.
அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ முஸ்யோகா இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவார்.
மேலும், இந்தக் குழுவில், ஆஸ்திரேலியாவின்
விக்டோரியா மாகாண முன்னாள் தேர்தல் அதிகாரியான ஜென்னி மக்முல்லன்,
வங்கதேசத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டாக்டர். சம்சுல் குடா
மற்றும் செயிண்ட் லூசியாவின், கரீபியன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான
அமைப்பின் செயலர் எஸ்ஸமின் பில்பேர்ட் ஆகியோரும் இந்தக் குழுவில்
இடம்பெறுவார்கள் என்று இது குறித்த அறிக்கை ஒன்றுகூறுகிறது.

0 comments:
Post a Comment