நிந்தவூரைச் சேர்ந்த இப்றாகிம் அஹ்சன் எழுதிய தொலைந்த கவிதையில் எழுந்த 'விழியோரத் துளிகள்' கவிதை தொகுப்பு நூல் நேற்று நிந்தவூரில் வெளியிடப்பட்டது.
கலைத்துறையில் புதிதாக
தடம்பதித்துள்ள இளம் கவிஞரும், நிந்தவூர் விளையாட்டு வர்ணனையாளர்கள்
சம்மேளனத்தின் அமைப்பாளரும், அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் க.பொ.த. (உ/த)
மாணவருமான இப்ராஹிம் அஹ்சனின் தொலைந்த கவிதையில் எழுந்த விழியோரத்துளிகள்
கவிதை நூல் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் வெளியிட்டு
வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கவிஞர் யு.எல். ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கவிஞர் கலாபூஷணம் ஏ. பீர் மொஹமட்கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிந்தவூர் கலை இலக்கிய வட்டப் பேரவையின் தலைவரும், வைத்தியருமான
ஏ.எம். ஜாபிர், கவிஞர் ஹசன் மௌலானா , கவிஞர் ஜெஸ்மி எம் மூசா,
பொறியியலாளர் கவிஞர் ஏ.இஸ்மாயில், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்
ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். ஒரு பாடசாலை மாணவராக இருந்து கலை
இலக்கியத்துறையில் பிரகாசிக்கும் இளம் கவிஞர் இப்றாகிம் அஹ்சனை அனைவரும்
வாழ்த்தினார்கள்.

0 comments:
Post a Comment