• Latest News

    September 15, 2013

    உலகின் மிகவும் ஆபத்தான சைக்கிள்?

    இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார்.

    வீட்டில் தயாரித்த ஜெட் என்ஜினை அவர் தனது சைக்கிளுக்கு பொருத்தியுள்ளார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு 50 மீட்டர் தூரம் பயணிக்க முடியுமென அவர் தெரிவிக்கின்றார்.
    பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக இச் சைக்கிள் தோன்றுகின்றது.  தற்போது 32 வயதான கொலின் இச் சைக்கிளுக்கு ‘நோரா’ எனப் பெயரிட்டுள்ளார்.

    இவர் இதற்கு முன்னரும் பல கண்டுபிடிப்புகளை இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ளார்.  தற்போது இவர் தனது புதிய சைக்களில் தொடர்பான காணொளியை யுடியூப்பில் வெளியிட்டுள்ளார். அக்காணொளி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
    மேலும் உலகின் மிகப் பெரிய பொன்பயர், நீளமான மோட்டார் சைக்கிள், வேகமான மொபிலிடி ஸ்கூடர், வேகமான ஸ்டோலர் போன்றவற்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தவர்.
    எனினும் இதற்கு முன்னர் ரோமானியாவைச் சேர்ந்த ரோல் ஹோய்டா என்பவர் 3 வருடம் உழைத்து தனது சைக்கிளில் ஜெட் என்ஜினை பொருத்தி சாதனை படைத்திருந்தார்.
    இச்சைக்கிள் 1 மணித்தியாலத்தில் 26 மீட்டர் பயணிக்கக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகின் மிகவும் ஆபத்தான சைக்கிள்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top