ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு திருமணம் செய்யும் அழைப்பை விடுத்து அதனை மறுத்த அமைச்சர் மேர்வின் சில்வா மற்றுமொரு திருமண யோசனையை முன்வைத்துள்ளார்.
பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் ஆளும் கட்சியின் அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்கவுக்கு அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.
குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேர்வின் சில்வா,
கீதாவை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று தோன்றுகிறது.
அவர் என்னை திருமணம் செய்திருந்தால், அவரது பெயர் கீதா குமாரசிங்க என்பதற்கு பதிலாக கீதா சில்வா என்று மாறியிருக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்த தேர்தல் கூட்டத்தில் கீதா குமாரசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். அமைச்சர் மேர்வின் சில்வா பேச்சை முடித்து விட்டு மேடையில் இருந்து இறங்கும் போது பேசிய கீதா,
“உங்களுக்கு அந்த காலத்தில் கதாநாயகனாக வேண்டும் என்ற பைத்தியம் இருந்தது என்பது எனக்கும் நினைவிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் திருமணம் செய்வது பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கலாம்” என்றார்.

0 comments:
Post a Comment