• Latest News

    October 26, 2013

    22 கேரட் தங்கத்தில் டாய்லெட் பேப்பர் தயாரிப்பு: விரைவில் விற்பனைக்கு வருகிறது

    பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம்.

    'டாய்லெட் பேப்பர் மேன்' என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர் ஆகும். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு சாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து வீட்டுக்கே டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனைக்கு தயாரிக்கவில்லை.

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 22 கேரட் தங்கத்தில் டாய்லெட் பேப்பர் தயாரிப்பு: விரைவில் விற்பனைக்கு வருகிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top