இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
டிரினிடாட் அன்டு டுபாகோ அணிக்கெதிராக 26வது ஓட்டங்களை கடந்த போது இச்சாதனை படைத்தார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
சதத்தில் சதம், அதிக ஓட்டங்கள், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு
சொந்தக்காரரான இவர், மேலும் ஒரு புதிய வரலாறு படைத்தார்.
டெல்லியில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்கான அரையிறுதியில்
டிரினிடாட் அன்டு டுபாகோ அணிக்கெதிராக துடுப்பாட்டத்தில் அசத்திய மும்பை
அணியின் சச்சின், தனது 26வது ஓட்டங்களை கடந்த போது, அனைத்து விதமாக
கிரிக்கெட்டில் 50 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனை
படைத்தார்.

0 comments:
Post a Comment