• Latest News

    October 06, 2013

    உடன்பாடு மீறப்பட்டால் கூட்டமைப்புக்கு ஆதரவு: முஸ்லீம் காங்கிரஸ் எச்சரிக்கை!

    கிழக்கு மாகாணசபை அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை மீறப்பட்டால், தமது கட்சி எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 07 உறுப்பினர்களின்
    ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தது. இதன்போது இறுதி இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உடன்பாடு எட்டப்பட்டது. அத்துடன் அமைச்சுக்கள் தொடர்பிலும் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன.
    எனினும் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக ஹசன் அலி குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே இந்தநிலைமை தொடருமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று ஹசன் அலி எச்சரித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உடன்பாடு மீறப்பட்டால் கூட்டமைப்புக்கு ஆதரவு: முஸ்லீம் காங்கிரஸ் எச்சரிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top