பாய்லின் சூறாவளி இந்தியாவின் ஒடிசாவை மாகாணத்தை தாக்கும் என்று எச்சரிக்கபட்டுள்ள நிலையில் . இந்த புயல் பயங்கர சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க கடற்படையின் புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது பியர்ல் துறைமுகத்தில் இயங்கும் அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தியா 14 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய புயல் சேதத்தை சந்திக்க உள்ளது என்று மையம் தெரிவித்துள்ளது .
அதேவேளை இந்தியாவை நோக்கி நகர்கின்ற பயலின் சூறாவளியால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்பட மாட்டாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .ஆனாலும் தற்போது வெளியாகும் தகவல்களின் படி நாட்டின் வடக்கு பகுதியில் கடல் கடும் கொந்தளிப்பாக உள்ளதாகவும் இதனால் வள்ளங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment