முல்லைத்தீவு மாவட்டத்தை அன்டிய கடல் பிரதேசத்தில் வெள்ளி நள்ளிரவு
11.00 மணியளவில் பாரிய கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் படகுகள் இஞ்சின்
வலைகட்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தேடும் பணி தொடர்வதாகவும் 30 மேற்பட்ட படகுகள் இஞ்சின்கள் காணாமல் போன
நிலையில் 04 படகு 09 இஞ்சின்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வடமாகாண
சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் அதிகமான மக்கள் மீன்பிடியை வாழ்வாதார
தொழிலாக கொண்டுள்ள இம்மாவட்ட மக்களின் பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கு முழு
முனைப்பும் காட்டப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி, போக்குவரத்து, கிராம
அபிவிருத்தி அமைச்சர் – டெனீஸ்வரனுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அவர்
வருவதாக உறுதியளித்ததுடன் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகம் சம்பவத்தை
அவதானித்ததாகவும் குறிப்பிட்டார் மாகாணசபை உறுப்பினர்.





0 comments:
Post a Comment