• Latest News

    October 26, 2013

    சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு ஒரு வாரம் அவகாசம்!

    கல்முனை மாநகர சபையின் மேயர் சிராஸ் மீராசாஹிவு தமது மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சாருமான ரவூப் ஹக்கிம் ஒரு வார கால அவகாசம் வழங்கி இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்து சிராஸ் மீராசாஹிவின்
    இராஜினாமா பற்றி கலந்துரையாடிய ரவூப் ஹக்கிம் சிராஸ் மீராசாஹிவு மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் கேட்டதாகவும், அதனை அவருக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    ஒரு வார காலத்திற்குள் அவர் மேயர் பதவியை இராஜினாமாச் செய்யாது விட்டால், அவருக்கு எதராக கட்சி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு ஒரு வாரம் அவகாசம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top