இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
36 வயதான டில்ஷான் 87 டெஸ்ட் போட்டிகளில் 5,492 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவற்றில் 16 டெஸ்ட் சதங்களும் அடங்கும்.
லோர்ட்ஸ் மைதானத்தில் 2011-இல் இங்கிலாந்து அணிக்கெதிராக குவித்த 193 ஓட்டங்கள் அவரது ஆகக்கூடிய டெஸ்ட் ஓட்டங்கள்.
'எனது இடத்திற்கு இன்னொரு இளைஞரை கொண்டு வந்து
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஊக்கப்படுத்துவதற்காக நான் இந்த முடிவை
எடுத்தேன்' என்றார் டில்ஷான்.
1999-ம் ஆண்டில் சிம்பாப்வேவுக்கு எதிரான
போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த திலகரட்ன டில்ஷான்,
நாளை வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
டில்ஷான் சர்வதேச 50-ஓவர் ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார்.
'எனது எதிர்காலம் குறித்து தேசிய கிரிக்கெட் தெரிவாளர்களுடன் பேசுவேன்.
அவர்களுக்கு நான் தேவைப்பட்டால் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை
விளையாடுவேன்' என்றும் டில்ஷான் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment